தமிழகத்தின் துணை முதல்வராகவும் நிதியமைச்சராகவும் பொறுப்பேற்றார் ஓ. பன்னீர்செல்வம்

தமிழகத்தின் துணை முதல்வராகவும் நிதியமைச்சராகவும் பொறுப்பேற்றார் ஓ. பன்னீர்செல்வம்

தமிழகத்தின் துணை முதல்வராகவும் நிதியமைச்சராகவும் பொறுப்பேற்றார் ஓ. பன்னீர்செல்வம்

எழுத்தாளர் Bella Dalima

21 Aug, 2017 | 7:09 pm

தமிழகத்தின் துணை முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பதவியேற்றுக்கொண்டார்.

அவருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழக ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற எளிமையான விழாவில், துணை முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பதவியேற்றுக்கொண்டார்.

இதன்போது, அமைச்சராக மாஃபா பாண்டியராஜனும் பதவியேற்றுக்கொண்டார்.

முக்கிய அமைச்சர்களும், அதிமுக-வின் முக்கிய நிர்வாகிகளும் இந்த விழாவில் பங்கேற்றிருந்தனர்.

தமிழகத்தின் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு அமைச்சர் ஜெயக்குமார் வகித்து வந்த நிதித்துறையும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வகித்து வந்த வீட்டு வசதித்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், குடிசை மாற்று வாரியம், நகர்ப்புற மேம்பாடு, சிஎம்டிஏ துறைகளும் பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்