தமிழகத்தின் துணை முதல்வராக பதவியேற்கவுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்

தமிழகத்தின் துணை முதல்வராக பதவியேற்கவுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்

தமிழகத்தின் துணை முதல்வராக பதவியேற்கவுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்

எழுத்தாளர் Bella Dalima

21 Aug, 2017 | 4:20 pm

அதிமுகவின் ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இரண்டும் இணைந்ததையடுத்து, தமிழகத்தின் துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்கவுள்ளார்.

பலகட்ட காத்திருப்புகளுக்குப் பிறகு, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இரு அதிமுக அணிகளின் இணைப்பு நிகழ்ந்துள்ளது.

ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இணைப்பு நிகழ்வில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இந்நாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது, கட்சிப் பதவிகள் தொடர்பாகவும் அமைச்சரவை மாற்றங்கள் குறித்தும் அறிவிக்கப்பட்டன.

அதன்படி, தமிழகத்தின் துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இரு அணிகளின் பிரிவுக்கு முன்பு அவர் தமிழகத்தின் முதல்வராக இருந்தார். தமிழகத்தின் முதல்வராக அவர் மூன்று முறைகள் பதவி வகித்துள்ளார்.

தற்பொழுது இரு அணிகளின் இணைப்பிற்குப் பிறகு, அதிமுகவில் முதன்முறையாக ஓ.பன்னீர் செல்வம் தமிழகத்தின் துணை முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்