ஊவ பரணகம பகுதியில் வெட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

ஊவ பரணகம பகுதியில் வெட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

21 Aug, 2017 | 7:22 am

ஊவ பரணகம திபுலன பகுதியில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 19 ஆம் திகதி இரவு, குறித்த பெண்ணின் வீட்டிற்கு வந்த நபரினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவத்தில் 33 வயதுடைய பெண் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் மோப்ப நாய்களைக் கொண்டு சோதனையிட்ட போது மோப்ப நாய்கள் சம்பவம் இடம்பெற்ற வீட்டிலிருந்து 1 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள வீடொன்றிற்கு சென்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த வீட்டில் வசித்தவர்கள் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பில் ஊவபரணகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்