இந்தியாவிற்கு தங்கம் கடத்த முயன்ற 4 பேர் கைது

இந்தியாவிற்கு தங்கம் கடத்த முயன்ற 4 பேர் கைது

இந்தியாவிற்கு தங்கம் கடத்த முயன்ற 4 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

21 Aug, 2017 | 1:04 pm

இந்தியாவிற்கு தங்கம் கடத்துவதற்கு முயற்சித்த நான்கு பேர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 9 தங்க பிஸ்கட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களில் இந்திய பிரஜை ஒருவரும் அடங்கியுள்ளார்.

20,23,24 மற்றும் 38 வயதானவர்களே தங்கம் கடத்த முயற்சித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் திருச்சி, கோயம்புத்தூர் மற்றும் மதுரை நோக்கி பயணிக்க தயாராக இருந்துள்ளனர்.

சந்தேகநபர்களிடம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள தங்கம் 21,32,955 ரூபா பெறுமதி என சுங்க ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்