அமெரிக்காவின் நாசகாரி போர்க்கப்பல் லிபியாவின் சரக்குக் கப்பலுடன் மோதல்: 10 பேரைக் காணவில்லை

அமெரிக்காவின் நாசகாரி போர்க்கப்பல் லிபியாவின் சரக்குக் கப்பலுடன் மோதல்: 10 பேரைக் காணவில்லை

அமெரிக்காவின் நாசகாரி போர்க்கப்பல் லிபியாவின் சரக்குக் கப்பலுடன் மோதல்: 10 பேரைக் காணவில்லை

எழுத்தாளர் Bella Dalima

21 Aug, 2017 | 4:56 pm

அமெரிக்காவின் ஜான் மெக்கெயின் என்ற நாசகாரி போர்க்கப்பல் சிங்கப்பூர் கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, லிபியாவின் அல்னிக் என்ற சரக்குக் கப்பலுடன் மோதியதில், 10 பேர் காணாமற்போயுள்ளனர்.

அமெரிக்க போர்க்கப்பலில் அதி நவீன தொழில்நுட்பக் கருவிகளும் சக்திவாய்ந்த ரேடார் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன.

சிங்கப்பூர் கடல் பகுதியில் மலாக்கா தீவு அருகே சென்று கொண்டிருந்த அமெரிக்க போர்க்கப்பல், லிபியாவை சேர்ந்த அல்னிக் என்ற சரக்கு கப்பலுடன் திடீரென மோதியுள்ளது.

இந்த விபத்தில் அமெரிக்க கப்பலில் இருந்த 10 பேர் காணாமற்போயுள்ளதாகவும் 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சரக்குக் கப்பல் 30 ஆயிரம் டன் சரக்குகளுடன் இருந்ததால், இந்த விபத்தில் அமெரிக்க போர்க்கப்பல் கடும் சேதமடைந்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்