ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளியான முருகன் ஜீவ சமாதியடையும் நோக்கில் உண்ணாவிரதம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளியான முருகன் ஜீவ சமாதியடையும் நோக்கில் உண்ணாவிரதம்

எழுத்தாளர் Staff Writer

19 Aug, 2017 | 6:44 pm

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் ஜீவ சமாதியடையும் நோக்கில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் துறவிக்கோலத்தில் சிறைத்துறை தலைவருக்கு கடந்த மாதம் மனுவொன்றை வேலூர் சிறை அதிகாரிகள் மூலம் அனுப்பியிருந்தார்.

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்துவரும் நிலையில் தனது விடுதலை கேள்விக்குறியாகியுள்ளதாகவும் சிறை வாழ்க்கையை வெறுப்பதாகவும் ஜீவசமாதி அடைய அனுமதிக்கவேண்டுமெனவும் அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சிறைச்சாலையின் வடக்கு நோக்கி அமர்ந்து, நேற்று முதல் ஜீவ சமாதிக்கான உண்ணாவிரதத்தில் அவர் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

ஜீவசமாதி அடைவது தொடர்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனுவையும் முருகன் அளித்திருந்த நிலையில் இதன் மீது எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முருகன் சிறைச்சாலைகள் விதிகளை மீறி செயற்படுவதால் அவருக்கான சலுகைகள் இரத்து செய்யப்படும் என வேலூர் சிறைச்சாலையின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்