மக்கள் சக்தி இன்று த குட் மார்க்கட்டுடன் கைகோர்த்தது

மக்கள் சக்தி இன்று த குட் மார்க்கட்டுடன் கைகோர்த்தது

எழுத்தாளர் Staff Writer

19 Aug, 2017 | 7:47 pm

நியூஸ்பெஸ்ட் மக்கள் சக்தி செயற்றிட்டம் நாடளாவிய ரீதியில் விஸ்தரிக்கப்பட்டுள்ள மிகவும் வெற்றிகரமான அபிவிருத்தி செயற்றிட்டமாகும்.

த குட் மார்கட், கிராமிய மக்களுக்காக இலங்கையின் இளைஞர்களால் முன்னெடுக்கப்படும் அதே போன்றதொரு அபிவிருத்தித் திட்டமாகும்.

மக்கள் சக்தி செயற்றிட்டமும், த குட் மார்கட்டும் இன்று கைகோர்த்தன.

கொழும்பு ஏழு பகுதியில் கிராமத்து உணவு அல்லது உள்ளூர் உற்பத்திகளை காண்பதென்பது அரிதான விடயமாகும்.

எனினும், சில வருடங்களுக்கு முன்னர் கொண்டுவரப்பட்ட குட் மார்க்கட் திட்டத்தினூடாக கிராமிய உற்பத்திகளை கொழும்பு ஏழுக்கு கொண்டுவர முடிந்தது.

இந்த கிராமிய உற்பத்தியாளர்களின் சந்தை வாய்ப்பை மேலும் விஸ்தரிக்கும் நோக்குடன் மக்கள் சக்தி இன்று குட் மார்க்கட்டுடன் கைகோர்த்துள்ளது.

இந்த விடயம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று முற்பகல் கைச்சாத்திடப்பட்டது.

த குட் மார்க்கட்டின் முகாமைத்துவ பணிப்பாளர் அச்சலா சமரதிவாகர மற்றும் வரையறுக்கப்பட்ட கெப்பிடல் மஹாராஜா நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளர் ஷெவான் டெனியல் ஆகியோரின் தலைமையின் கீழ் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இந்த நிகழ்வில் ட்ரெவிஸ் டி ஜோன் உள்ளிட்ட சிலர் கலந்துக் கொண்டனர்.

குட் மார்க்கட் மற்றும் மக்கள் சக்தி இணைந்து செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி கண்டியில் முதலாவது சந்தையை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்