பிஹார் மாநிலத்தில் ஏற்பட்ட வௌ்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 153 ஆக அதிகரிப்பு

பிஹார் மாநிலத்தில் ஏற்பட்ட வௌ்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 153 ஆக அதிகரிப்பு

பிஹார் மாநிலத்தில் ஏற்பட்ட வௌ்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 153 ஆக அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

19 Aug, 2017 | 6:31 pm

பிஹார் மாநிலத்தில் மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 153 ஆக அதிகரித்துள்ளது.

மழை, வெள்ளத்தால் 17 மாவட்டங்களில் மிகக்கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பிஹாரின் 16 மாவட்டங்களைச் சேர்ந்த 98 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலம் முழுவதும், 1289 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

முகாம்களில் 3.29 இலட்சம் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பிஹாரின் 16 மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் கிழக்கு மத்திய ரயில்வே போக்குவரத்து பெரிதும் தடைபட்டுள்ளது.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து பொதுமக்களை ரப்பர் படகு மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக 118 படகுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை பிஹாரில் தாய், மகள்கள் உட்பட மூவர் பாலத்தைக் கடக்க முயன்றபோது, பாலம் இடிந்து வீழ்ந்ததால் அவர்கள் வெள்ளத்தில் மூழ்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிஹார், வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள அராரியா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வெள்ளம் சூழ்ந்தது.

அங்கிருந்து பாலத்தின் வழியாக மறுகரைக்குச் சென்று மக்கள் வெளியேறிக் கொண்டிருந்தனர். அப்போது தாய் ஒருவர், தனது இரு மகள்களுடன் வேகமாகப் பாலத்தைக் கடக்க முயன்றார்.

அப்போது எதிர்பாராத விதமாக பாலம் இடிந்து வீழ்ந்ததால், குடும்பத்தினர் மூவரும் வெள்ளத்தில் மூழ்கினர்.

அடித்துச் செல்லும் நீரில் இருந்து அவர்கள் வெளியேற முயன்றனர். ஆனாலும் வெள்ளத்தின் வேகத்தில் அவர்கள் அடித்துச் செல்லப்பட்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்