நுவரெலியா, இரத்தினபுரி, மாத்தறை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நுவரெலியா, இரத்தினபுரி, மாத்தறை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

எழுத்தாளர் Staff Writer

19 Aug, 2017 | 6:17 pm

அதிக மழை காரணமாக நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாயம், கற்பாறைகள் சரிந்து வீழ்தல், நிலச்சரிவு என்பன தொடர்பில் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு இடர் முகாமைத்துவ நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

மண்சரிவு ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுமாயின் குறித்த பகுதிகளிலிருந்து உடனடியாக வௌியேறுமாறு இடர்முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அதிக மழைக் காரணமாக குக்குலேகங்க நீர்த்தேக்கத்தின் வான் கதவொன்று திறக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நீர்த்தேக்ககத்தின் தாழ்நிலப்பகுதியில் வாழும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறும் இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

இதேவேளை நாட்டின் பல பகுதிகளில் இன்று பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்