நாட்டில் நிர்மாணிக்கப்படும் பாரிய நீர்த்தேக்கமான மொரகாகந்த திட்டத்தின் மற்றுமொரு கட்டம் ஆரம்பம்

நாட்டில் நிர்மாணிக்கப்படும் பாரிய நீர்த்தேக்கமான மொரகாகந்த திட்டத்தின் மற்றுமொரு கட்டம் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

19 Aug, 2017 | 7:33 pm

மொரகாகந்த திட்டத்தின் ஊடாக நீர் விநியோகம் முன்னெடுக்கபபடவுள்ள பிரதேசங்களில் வாவிகளை அமைப்பதற்கும், புனரமைப்பதற்குமான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படும் மொரகாகந்த திட்டம் 30 வருடங்களின் பின்னர் நாட்டில் நிர்மாணிக்கப்படும் பாரிய நீரத்தேக்கமாகும்.

660,000 சதுர பரப்பளவிலான மொரகாகந்த, களுகங்கை, பராக்கிரம சமுத்திரம் ஆகியவற்றின் நீர் கொள்ளவின் ஆறுமடங்கு அதிக கொள்ளவுள்ளவான நீரத்தேக்கம்.

இதேவேளை, களு கங்கயைின் மேலதிக நீரினை மொரகாகந்தவிற்கு கொண்டுசெல்வதற்காக 9 கிலோமீற்றர் சுரங்க கால்வாய் நிர்மாணிக்கப்படுகின்றது.

இதனூடாக சுமார் 12,000 விவசாய குடும்பங்களுக்கு நீர் வழங்கப்படவுள்ளதுடன், குடிநீரும் வழங்கமுடியும்.

மொரகாகந்த திட்டத்தினூடாக பாரிய, சிறிய வாவிகளின் நிர்மாணம் மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தினால் காணியினை இழந்த மக்கள் மெதிரிகிரிய அபிவிருத்தி பகுதியில் குடியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த திட்டத்தினூடாக சுற்றாடல் மசடைதலை குறைத்து, வன விலங்குகளை பாதுகாக்கும் வேலைத்திட்டங்களும் முன்னெடுக்ப்படுகின்றன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்