ஒரே சமயத்தில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்கும் வசதிகளுடன் Nokia 8

ஒரே சமயத்தில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்கும் வசதிகளுடன் Nokia 8

ஒரே சமயத்தில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்கும் வசதிகளுடன் Nokia 8

எழுத்தாளர் Staff Writer

19 Aug, 2017 | 5:40 pm

வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நோக்கியா 8 ஸ்மார்டபோனை ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

சம்சங் கேலக்ஸி S8, ஒன்பிளஸ் 5 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 8 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஃபோன் அடுத்த மாதம் முதல் விற்பனைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த போனில் 13 மெகாபிக்சல் கொண்ட டூவல் கமரா உள்ளது, இதனால் பிரைமரி மற்றும் செல்பி கமரா மூலம் சமூக வலைத்தளங்களில் நேரலை வீடியோக்களை ஒரே சமயத்தில் பதிவு செய்யலாம்.

5.3 இன்ச் IPS QHD டிஸ்ப்ளே, 2560 x 1440 கார்னிங் கொரில்லா கிளாஸ், அன்ட்ரொய்ட் 7.1.1 நௌகட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 போரசஸர் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ், 256 ஜிபி வரை நீட்டிக்கப்படும் வசதி, டூயல் சிம் சப்போர்ட், 3090mAh பேட்டரி திறன், வாட்டர் மற்றும் டஸ்ட் ப்ரூஃப் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை இது கொண்டுள்ளது.

இந்த போன், பாலிஷ்டு ப்ளூ, டெம்ப்பர்ட் ப்ளூ, ஸ்டீல், பாலிஷ்டு காப்பர் உள்ளிட்ட வண்ணங்களில் கிடைக்கிறது. மேலும், ஒரே சமயத்தில் முன்பக்க கமரா மற்றும் பிரைமரி கமராக்களை பயன்படுத்தி வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected]sfirst.lk இல் எங்களை தொடர்பு கொள்ளவும்