மோட்டார் சைக்கிள், கெப் மற்றும் சிறிய ரக ட்ரக் வண்டிகளுக்கு இன்று நள்ளிரவு முதல் வரி நிவாரணம்

மோட்டார் சைக்கிள், கெப் மற்றும் சிறிய ரக ட்ரக் வண்டிகளுக்கு இன்று நள்ளிரவு முதல் வரி நிவாரணம்

எழுத்தாளர் Bella Dalima

17 Aug, 2017 | 8:02 pm

மக்களுக்கு நிவாரணங்கள் சிலவற்றை வழங்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானம் தொடர்பில் நிதியமைச்சர் மங்கள சமரவீர இன்று தௌிவூட்டினார்.

10 வீத தொலைத்தொடர்பாடல்கள் வரியை முற்றாக நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மங்கள சமரவீர இதன்போது தெரிவித்தார்.

[quote]10 வீதத்திற்கு மேலதிகமாக கடந்த 2017 வரவு செலவுத்திட்டத்தில் இந்த வரியை 25 வீதமாக உயர்த்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. அதாவது, மேலும் 15 வீதத்தால் அதிகரிக்கப்படவிருந்தது. ஆயினும், அந்த வரவு – செலவுத்திட்ட யோசனையை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கும், தற்போது அமுலிலுள்ள 10 வீத வரியை நீக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இணையத்தள பாவனையின்போது உண்மையிலேயே பாவனையாளர்களுக்கு 25 வீத நிவாரணம் கிடைக்கின்றது[/quote]

என நிதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.

செப்டம்பர் முதலாம் திகதியிலிருந்து மின் தொலைத்தொடர்பாடல் வரி நீக்கம் அமுலுக்கு வருகிறது.

இதேவேளை, சிறிய ரக லொறி மற்றும் சிங்கிள் கெப் வாகனங்களுக்கு 10 இலட்சம் ரூபா உற்பத்தி வரி அறவிடப்பட்டு வரும் நிலையில், அந்த வரி 7 இலட்சம் ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

இந்த வரித்திருத்தம் இன்று (17) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது.

இதுதவிர, 150 சீ.சீ. ரக மோட்டார் சைக்கிள்களுக்கான வரி, தற்போது அறவிடப்படும் பெறுமதியில் 90 வீதம் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த வரியையும் இன்று நள்ளிரவு முதல் நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதியமைச்சர் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்