பிரதமர் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு மற்றும் பாராளுமன்ற குழுக்கூட்டம்

பிரதமர் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு மற்றும் பாராளுமன்ற குழுக்கூட்டம்

எழுத்தாளர் Bella Dalima

17 Aug, 2017 | 10:21 pm

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் மற்றும் பாராளுமன்ற குழுக்கூட்டம், கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று முற்பகல் நடைபெற்றது.

இந்த கூட்டம் நடைபெற்ற போது ”கிறீன் பிளட்” அமைப்பு நிர்மாணித்துள்ள வீட்டைக் கையளிக்கும் நிகழ்வை ஔிப்பதவி செய்வதற்கு பிரதமரால் ஊடகங்களுக்கு எழுத்து மூலம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதனை ஔிப்பதிவு செய்வதற்காக சென்ற ஊடகவியலாளர்கள் செயற்குழு மற்றும் பாராளுமன்றக்குழுக்கூட்டம் நிறைவடையும் வரை சிறிய அறையொன்றில் தங்கியிருக்க வேண்டி ஏற்பட்டது.

சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் கூட்டத்தின் போது உரத்த குரலில் கருத்து வௌியிட்டமையை அவதானிக்க முடிந்ததாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

கூட்டம் நிறைவடைந்து ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் கபீர் ஹாசிம், இராஜாங்க அமைச்சர் ரவி சமரவீர ஆகியோர் வௌியில் வந்து ”கிரீன் பிளட்” அமைப்பு அமைத்திருந்த வீட்டைக் கையளித்தனர்.

 

மேலதிகத் தகவல்களை காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்