பிங்கல்தெனிய, பாதுக்கையில் இடம்பெற்ற விபத்துக்களில் மூவர் பலி

பிங்கல்தெனிய, பாதுக்கையில் இடம்பெற்ற விபத்துக்களில் மூவர் பலி

பிங்கல்தெனிய, பாதுக்கையில் இடம்பெற்ற விபத்துக்களில் மூவர் பலி

எழுத்தாளர் Bella Dalima

17 Aug, 2017 | 3:15 pm

அவிசாவளை – கேகாலை பிரதான வீதியில் பிங்கல்தெனிய பகுதியில் காரொன்று விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த மேலும் மூன்று பெண்கள் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

சம்பவத்தில் 57 வயதான நபரும் அவரது 31 வயதான மகனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடுகன்னாவ பகுதியைச் சேர்ந்தவர்களே விபத்திற்குள்ளாகியுள்ளனர்.

இதேவேளை, பாதுக்கை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹொரணையிலிருந்து பாதுக்கை நோக்கி பயணித்த ஜீப் வண்டியொன்று முன்னால் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.

பாதுக்கை பகுதியைச் சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

ஜீப்பின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பாதுக்கைபொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்