பார்சிலோனாவில் மக்கள் கூட்டம் நிறைந்த பகுதியில் வேன் நுழைந்து தாக்குதல்

பார்சிலோனாவில் மக்கள் கூட்டம் நிறைந்த பகுதியில் வேன் நுழைந்து தாக்குதல்

பார்சிலோனாவில் மக்கள் கூட்டம் நிறைந்த பகுதியில் வேன் நுழைந்து தாக்குதல்

எழுத்தாளர் Bella Dalima

17 Aug, 2017 | 10:47 pm

மத்திய பார்சிலோனாவில் வேன் ஒன்று மக்கள் கூட்டம் நிறைந்த பகுதிக்குள் நுழைந்து தாக்கியுள்ளது.

இந்த தாக்குதலில் பலர் இறந்திருக்கக்கூடும் என ஸ்பானிய ஊடகங்கள் தகவல் வௌியிட்டுள்ளன.

பார்சிலோனாவின் லாஸ் ரம்ப்ளாஸ் மாவட்டத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.

உணவு விடுதியொன்றின் அருகில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், குறித்த விடுதிக்குள் ஆயுதமேந்திய சிலர் உள்ளிட்டதைத் தாம் பார்த்ததாக பொலிஸாரிடம் சிலர் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் இதனை ஒரு தீவிரவாத தாக்குதலாக இருக்குமென சந்தேகிக்கின்றனர்.

தாக்குதல் நடத்தப்பட்ட பகுதி சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்லும் பகுதியென குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்