நீர்கொழும்பில் இடிந்து வீழ்ந்த மாடிக்கட்டடம்: மீட்கப்பட்ட நால்வர் வைத்தியசாலையில் அனுமதி

நீர்கொழும்பில் இடிந்து வீழ்ந்த மாடிக்கட்டடம்: மீட்கப்பட்ட நால்வர் வைத்தியசாலையில் அனுமதி

எழுத்தாளர் Bella Dalima

17 Aug, 2017 | 3:32 pm

நீர்கொழும்பில் நிர்மாணிக்கப்பட்ட மாடிக்கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளது.

கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த நால்வர் மீட்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

அனர்த்தம் ஏற்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் 7 பேர் அங்கு நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது கட்டடத்தின் மூன்றாம் மாடியின் கொங்கிரீட் தட்டில் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததுடன், நான்கு பணியாளர்கள் இடிபாடுகளில் சிக்குண்டனர்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்