தனது உயிலை மாற்றி எழுதுகிறார் ப்ரிட்னி ஸ்பியர்ஸ்

தனது உயிலை மாற்றி எழுதுகிறார் ப்ரிட்னி ஸ்பியர்ஸ்

தனது உயிலை மாற்றி எழுதுகிறார் ப்ரிட்னி ஸ்பியர்ஸ்

எழுத்தாளர் Bella Dalima

17 Aug, 2017 | 4:50 pm

பிரபல பாப் பாடகி ப்ரிட்னி ஸ்பியர்ஸ் தனது உயிலை மாற்றி எழுதப்போவதாக அறிவித்துள்ளார்.

தனது இரண்டு மகன்களுக்கும் சரியான வயதில் உரிய ஆதாயம் கிடைக்குமாறு உயில் மாற்றியமைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

90-களின் இறுதியில் அமெரிக்க பாப் உலகை அசரடித்தவர் ப்ரிட்னி ஸ்பியர்ஸ்.

குறைந்த வயதில் பல மில்லியன் டொலர்களை சம்பாதித்த ப்ரிட்னியின் வாழ்க்கையில் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை.

மகன்கள் ஷான் மற்றும் ஜேடன் பிறப்பதற்கு முன்னாலேயே தனது உயிலை எழுதியிருந்தார் ப்ரிட்னி.

அதன்படி 18 வயதிலேயே அவர்களுக்கு ப்ரிட்னியின் அனைத்து சொத்துகளும் போய்ச்சேரும்.

ஆனால், இந்த புதிய உயிலின் படி, புதிதாக அறக்கட்டளை ஒன்றை ப்ரிட்னி உருவாக்கியுள்ளார். இதில் ப்ரிட்னியின் முன்னாள் கணவர் கெவின் ஃபெடர்லைனும் உள்ளார்.

இந்த அறக்கட்டளையின் மூலம் ப்ரிட்னியின் சொத்து பகுதி பகுதியாக அவரது மகன்களைப் போய்ச்சேரும். அவர்கள் 35 வயதை எட்டிய பிறகே முழு சொத்தையும் அனுபவிக்க முடியும்.

இளம் வயதிலேயே ஏகப்பட்ட பணம் மகன்களுக்கு போக வேண்டாம் என்பதாலேயே ப்ரிட்னி இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்