கழிவுகளைப் பயன்படுத்தி மின்சார உற்பத்தி: இரண்டாவது திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

கழிவுகளைப் பயன்படுத்தி மின்சார உற்பத்தி: இரண்டாவது திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

கழிவுகளைப் பயன்படுத்தி மின்சார உற்பத்தி: இரண்டாவது திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

எழுத்தாளர் Bella Dalima

17 Aug, 2017 | 4:09 pm

கழிவுகளைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் இரண்டாவது திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

கரதியான கழிவு மீள்சுழற்சி நிலையத்தில் இந்த திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலம் 10 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவுள்ளது.

மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் மாநகரசபைகள் அமைச்சர், மேல் மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மின் உற்பத்தி நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

500 தொன் கழிவுகளை மின்சார உற்பத்திக்கு பயன்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்