ஷிரந்தி ராஜபக்ஸவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம் பதிவு

ஷிரந்தி ராஜபக்ஸவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம் பதிவு

எழுத்தாளர் Bella Dalima

15 Aug, 2017 | 8:38 pm

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஸ, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று அழைக்கப்பட்டிருந்தார்.

சிரிலிய அமைப்பிற்கு வழங்கப்பட்டிருந்த டிபென்டர் வாகனத்தின் நிறத்தை மாற்றி, அதனை யோஷித்த ராஜபக்ஸவின் பாவனைக்கு வழங்கியமை தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே அவர் இன்று அழைக்கப்பட்டிருந்தார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சுமார் 5 மணித்தியாலங்கள் ஷிரந்தி ராஜபக்ஸ இருந்ததாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதியின் மகனான ரோஹித்த ராஜபக்ஸவும் வாக்குமூலம் வழங்குவதற்காக நிதிக்குற்ற விசாரணைப் பிரிவிற்கு சென்றிருந்தார்.

சீனாவிலுள்ள சுப்ரீம் செட் வன் என்ற செய்மதி மற்றும் குறித்த திட்ட நிறுவனம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அழைக்கப்பட்டிருந்தார்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்