ரோஹித ராஜபக்ஸ பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜர்

ரோஹித ராஜபக்ஸ பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜர்

ரோஹித ராஜபக்ஸ பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜர்

எழுத்தாளர் Staff Writer

15 Aug, 2017 | 10:17 am

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இளைய மகனான ரோஹித ராஜபக்ஸ சற்று நேரத்திற்கு முன்னர் வாக்குமூலம் வழங்குவதற்காக பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் ஷிரந்தி ராஜபக்ஸ ஆகியோரும் இதன்போது பிரசன்னமாகியிருந்ததாக எமது செய்தியாளர் கூறினார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஸவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகை தந்துள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

சிரிலிய சவிய ஜீப் வாகனம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக ஷிரந்தி ராஜபக்ஸ குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்