லிந்துலையில் புதைக்கப்பட்ட சிசுவின் சடலம் தோண்டியெடுப்பு: தடுப்புக்காவலில் பாட்டி

லிந்துலையில் புதைக்கப்பட்ட சிசுவின் சடலம் தோண்டியெடுப்பு: தடுப்புக்காவலில் பாட்டி

எழுத்தாளர் Bella Dalima

14 Aug, 2017 | 9:04 pm

லிந்துலை – மட்டக்கலை தோட்டத்தில் புதைக்கப்பட்ட சிசுவின் சடலம் இன்று தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்ட பதில் நீதவான் முன்னிலையில் சிசுவின் சடலம் இன்று பிற்பகல் 1 மணியளவில் தோண்டி எடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சிசுவின் சடலம் பிரேதப்பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்கலை தோட்டத்தின், 7 ஆம் இலக்க கொலனியில் கடந்த வியாழக்கிழமை (10) சிசுவொன்று புதைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இதனையடுத்து, சிசுவின் தாய் மற்றும் பாட்டி லிந்துலை பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

சிசுவின் தாய் மருத்துவப் பரிசோதனைக்காக லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சிசுவின் பாட்டி நுவரெலியா மாவட்ட நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்