தொலைத்தொடர்பு உபகரணங்களை வழங்குமாறு அர்ஜூன் மகேந்திரனுக்கு உத்தரவு

தொலைத்தொடர்பு உபகரணங்களை வழங்குமாறு அர்ஜூன் மகேந்திரனுக்கு உத்தரவு

எழுத்தாளர் Bella Dalima

14 Aug, 2017 | 7:34 pm

விசாரணைகளுக்கு தேவைப்படும் தொலைத்தொடர்பு உபகரணங்களை குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு வழங்குமாறு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் மற்றும் கசுன் பாலிசேன ஆகியோருக்கு முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு இன்று உத்தரவிட்டது.

ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் அந்தத் தரப்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி ஒருவரின் கண்காணிப்பின் கீழ் அந்த உபகரணங்களை வழங்க வேண்டும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், தொலைத்தொடர்பு உபகரணங்களில் இருந்து தகவல்களைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் மீண்டும் அதனை சீல் வைத்து ஆணைக்குழுவின் செயலாளரின் பொறுப்பில் வைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாட்சி விசாரணைகளின் பின்னர் அர்ஜூன் மகேந்திரன் மற்றும் கசுன் பாலிசேனவின் தொலைத்தொடர்பு உபகரணங்கள் மீண்டும் கையளிக்கப்படும் எனவும் முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு இன்று தெரிவித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்