தனது பதவிகளை இராஜினாமா செய்தார் முகுந்தன் கனகே

தனது பதவிகளை இராஜினாமா செய்தார் முகுந்தன் கனகே

எழுத்தாளர் Staff Writer

14 Aug, 2017 | 1:07 pm

ஐ.சி.டி.ஏ எனப்படும் இலங்கை தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழிநுட்ப நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி பதவிகளிலிருந்து தாம் இராஜினாமா செய்துள்ளதாக முகுந்தன் கனகே தெரிவித்துள்ளார்.

நிதி மோசடி மற்றும் ஊழல் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் கடந்த காலங்ளில் முகுந்தன் கனகே விமர்சனத்திற்குள்ளானார்.

இந்த விடயம் தொடர்பில் எதிர்கட்சியின் பிரதம கொறடா அநுர குமார திசாநாயக்க அண்மையில் பாராளுமன்றத்திலும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை ஒன்றை சமர்பிக்குமாறு ஐ.சி.டி.ஏ நிறுவனத்திற்கு பணிப்பதாக பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா பாராளுமன்றத்தில் பதில் வழங்கியிருந்தார்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்