செஞ்சோலை படுகொலையின் 11ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது

செஞ்சோலை படுகொலையின் 11ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது

எழுத்தாளர் Bella Dalima

14 Aug, 2017 | 7:49 pm

செஞ்சோலை படுகொலையின் 11ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன.

முல்லைத்தீவு – வள்ளிபுனத்தில் இன்று நடைபெற்ற செஞ்சோலை படுகொலையின் 11ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வில், தாக்குதலில் கொல்லப்பட்ட சிறுமிகளின் உறவினர்கள் கலந்துகொண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

இதன்போது, நினைவு தூபிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

இதேவேளை, செஞ்சோலை படுகொலை நினைவு தினம், யாழ். பல்கலைக்கழகத்திலும் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.விக்னேஸ்வரன் பொதுச்சுடரேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்ததுடன், விரிவுரையாளர்கள், மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

இதேவேளை, கிளிநொச்சி – முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வற்றாப்பளை அம்மன் ஆலயத்தில் இன்று வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

பொங்கல் வைத்து வழிபாடுகளில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக ஆத்ம சாந்தி பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்