சவுதிக்கு பணிப் பெண்ணாக சென்ற மற்றுமொரு பெண் சடலமாக நாடு திரும்பினார்

சவுதிக்கு பணிப் பெண்ணாக சென்ற மற்றுமொரு பெண் சடலமாக நாடு திரும்பினார்

எழுத்தாளர் Staff Writer

14 Aug, 2017 | 2:05 pm

சவுதிக்கு பணிப் பெண்ணாக சென்று உயிரிழந்த மற்றுமொரு பெண்ணின் சடலம் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

குருநாகல் மொரகொல்ல பகுதியைச் சேர்ந்த 48 வயதான ஆர்.டப்ளியூ .சோமலதா என்ற பெண்ணின் சடலமே கொண்டுவரப்பட்டுள்ளது.

வௌிநாட்டு வேலைவாய்பு முகவர் நிலையமொன்றினூடாக கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி இந்த பெண் வௌிநாட்டிற்கு சென்றுள்ளார்.

தனது தாயின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக உயிரிழந்த பெண்ணின் மகன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

குறித்த பெண் சுகவீனமடைந்ததன் பின்னர் வீட்டுரிமையாளர் வைத்தியசாலையில் அனுமதித்ததாக இலங்கைக்கான சவுதி தூதரகம் அறிவித்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் உபுல் தேஷப்பரிய குறிப்பிட்டுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னரே அவர் உயிரிழந்துள்ளதாகவும், அவருக்கான நட்ட ஈட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்