காலி, பொலன்னறுவையில் ஊழலற்ற இலங்கையைக் கட்டியெழுப்பும் செயற்றிட்டம்

காலி, பொலன்னறுவையில் ஊழலற்ற இலங்கையைக் கட்டியெழுப்பும் செயற்றிட்டம்

எழுத்தாளர் Bella Dalima

14 Aug, 2017 | 8:25 pm

மக்களின் பணத்தை வீண் விரயமாக்கும் செயற்திறனற்ற திட்டங்கள் தொடர்பில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.

ஊழலற்ற இலங்கையைக் கட்டியெழுப்பும் செயற்றிட்டம் இன்று காலி மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டது.

காலி மாவட்டத்தின் அம்பலாங்கொடை , கராந்தெனிய , அல்பிட்டி போன்ற பகுதிகளுக்கு நியூஸ்பெஸ்ட் குழுவினர் சென்று மக்களின் குரலுக்கு செவிமடுத்தனர்.

அல்பிட்டி பிரதேசத்திற்கு சென்றிருந்த போது காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்கவையும் நியூஸ்பெஸ்ட் குழுவினர் சந்தித்தனர்.

பொலன்னறுவை மாவட்டத்திற்கு சென்றுள்ள நியூஸ்பெஸ்ட்டின் மற்றைய குழுவினர் கந்துருவெல நகரில் மக்களைத் தௌிவுபடுத்தினர்.

அதன் பின்னர் மனம்பிட்டி , செவனப்பிட்டிய, வெலிகந்த ஆகிய பகுதிகளுக்கும் நியூஸ்பெஸ்ட் குழுவினர் விஜயம் செய்தனர்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்