இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த 4 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த 4 இந்திய மீனவர்கள் கைது

எழுத்தாளர் Staff Writer

14 Aug, 2017 | 10:31 am

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த இந்திய மீனவர்கள் 4 பேர் வடக்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய மீனவர்களின் ட்ரோலர் படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கமாண்டர் சமிந்த வலாகுலுகே தெரிவித்துள்ளார்.

பருத்தித்துறைக்கு 18 கடல் மைல் தொலைவில் இந்திய மீனவர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட பணிமனைக்கு ஒப்படைக்கவுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்