இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 171 ஓட்டங்களால் வெற்றி

இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 171 ஓட்டங்களால் வெற்றி

இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 171 ஓட்டங்களால் வெற்றி

எழுத்தாளர் Bella Dalima

14 Aug, 2017 | 3:21 pm

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 171 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலம் 03 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 3 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

கண்டி பல்லேகலை மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 487 ஓட்டங்களைப் பெற்றது

முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இலங்கை அணி 135 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

ஃபாலோ-ஒன்னில் 352 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 181 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இந்திய அணி கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 08 டெஸ்ட் தொடர்களில் விளையாடியுள்ளதோடு, அந்த 08 தொடர்களையும் கைப்பற்றியுள்ளது.

மேலும், அதிக டெஸ்ட் தொடர்களை வெற்றியீட்டிய மூன்றாவது அணி என்ற சிறப்பையும் இந்திய அணி பெற்றுள்ளது.

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் 9 தொடர்களை வெற்றியீட்டி முதலாம் இரண்டாம் இடங்களில் நீடிக்கின்றன.

இந்த வெற்றியுடன் இந்திய அணி 08 டெஸ்ட் தொடர்களை வெற்றியீட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்