அரச அலுவலகப் படிவங்களை மும்மொழிகளிலும் மொழிபெயர்க்கும் நடவடிக்கை ஆரம்பம்

அரச அலுவலகப் படிவங்களை மும்மொழிகளிலும் மொழிபெயர்க்கும் நடவடிக்கை ஆரம்பம்

எழுத்தாளர் Bella Dalima

14 Aug, 2017 | 8:55 pm

மக்களின் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் படிவங்களை மூன்று மொழிகளிலும் மொழிபெயர்க்கும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தேசிய நல்லிணக்கம், கலந்துரையாடல் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தலைமையின் கீழ் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதுபற்றி அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்ததாவது,

[quote]அரச அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் படிவங்கள் மும்மொழிகளிலும் இருக்கவேண்டும். தெற்கில் பார்த்தால் அனைத்தும் சிங்கள மொழிகளிலேயே இருக்கின்றன. அது பிழையானது, சட்டவிரோதமானது. வட, கிழக்கில் மாகாணசபை சார்ந்த இடங்களைப் பார்த்தால் அதுவும் தமிழில் மாத்திரம் இருக்கின்றது. அதுவும் சட்டவிரோதமானது. நாடு முழுவதும் சிங்களமும் தமிழும் ஆட்சி மொழிகள். ஆங்கில மொழி இணை மொழி. தேசிய பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வு அவசியம். மொழிக்கொள்கையை சரியாக நடைமுறைப்படுத்துவோமானால் தேசிய பிரச்சினை நூற்றுக்கு 51 வீதம் முடிவுக்கு வரும்.[/quote]

என தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்