விஜேதாச ராஜபக்ஸவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை: அரசியல் அரங்கில் கருத்து

விஜேதாச ராஜபக்ஸவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை: அரசியல் அரங்கில் கருத்து

எழுத்தாளர் Staff Writer

13 Aug, 2017 | 8:57 pm

முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் ரவி கருணாநாயக்கவின் இராஜினாமாவின் பின்னர், மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணை பிரதான தலைப்பாக மாறியுள்ளது.

அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளதாக அரசியல் அரங்கில் பேசப்படுகின்றது.

தமது கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் புத்தசாசன மற்றும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸவிற்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் கடந்த இரண்டு வாரங்களாக பல்வேறு முரண்பாடுகள் நிலவி வருகின்றன.

கட்சிக்குள் இடம்பெறும் இந்த முறுகல் நிலை தொடர்பில் கடந்த முதலாம் திகதி நடைபெற்ற சட்டண அரசியல் நிகழ்ச்சியில் பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா இவ்வாறு கருத்து வௌியிட்டார்…

[quote]கேள்வி – குற்றச்செயல்கள் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்ய விசேட நீதிமன்றமொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டுமென அமைச்சரவையில் பேசப்பட்டுள்ளது. ஏன் அது வௌிப்படுத்தப்படுவதில்லை?

பதில் – அதற்கு நீதியமைச்சர் இணங்குவதில்லை. பல தடவைகள் கூறப்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து விடயத்துக்குப் பொறுப்பான நீதியமைச்சர் பொறுப்புடன் செயற்பட வேண்டும். எனினும் நீதியமைச்சர் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.[/quote]

இவ்வாறு கூறி இரண்டு வாரங்களின் பின்னர் பிரதியமைச்சர் அஜித் பி பெரேராவின் கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பின் வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட்டனர்.

கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு, அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸவின் பொறுப்பிலுள்ள சட்ட மாஅதிபர் திணைக்களம் மந்த கதியில் செயற்படுவதாக அவர்கள் குற்றம் சுமத்தினர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்