லிந்துலையில் பிறந்த சிசுவை புதைத்த சம்பவம் தொடர்பில் 2 பெண்கள் கைது

லிந்துலையில் பிறந்த சிசுவை புதைத்த சம்பவம் தொடர்பில் 2 பெண்கள் கைது

எழுத்தாளர் Staff Writer

13 Aug, 2017 | 8:01 pm

லிந்துலை மட்டுக்கலை 7 ஆம் இலக்க கொலணியில் பிறந்த சிசுவை புதைத்த சம்பவம் தொடர்பில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குழந்தையை பிரசவித்த பெண் நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதிக குருதிப் போக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து லிந்துலை வைத்தியசாலைக்கு சென்ற பெண் அங்கிருந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மருத்துவ பரிசோதனையின் பின்னர் குறித்த பெண், குழந்தை பிரசவித்துள்ளதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து , குறித்த பெண் பிரசவித்த சிசு, மரக்கறி தோட்டத்தில் புதைக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனை அடுத்து சிசுவை புதைப்பதற்கு உதவி புரிந்த பெண்ணொருவரையும், சிசுவை பிரசவித்த பெண்ணின் தாயும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சிசு புதைக்கப்பட்டுள்ள பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் நாளை சிசுவின் சடலம் தோண்டி எடுக்கப்படவுள்ளதாகவு பொலிஸார் கூறினர்.

23 வயதான பெண் ஒருவரே சிசுவை பிறசவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்