யாழில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாடகர் உன்னிகிருஷ்ணனின் இசை நிகழ்ச்சி இரத்து

யாழில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாடகர் உன்னிகிருஷ்ணனின் இசை நிகழ்ச்சி இரத்து

எழுத்தாளர் Staff Writer

13 Aug, 2017 | 7:48 pm

யாழ்ப்பாணத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரபல தென்னிந்திய பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணன் கலந்து கொள்ளவிருந்த இசை நிகழ்ச்சி இரத்துச் செய்யப்பட்டது.

இந்த இசை நிகழ்ச்சி தொடர்பில் யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

இந்தப் பின்புலத்தில் நேற்று (12) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரபல தென்னிந்திய பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணனின் இசை நிகழ்ச்சி நடைபெறவில்லை.

இது குறித்து திருகோணமலையில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் தென்இந்திய பாடகர் உன்னிகிருஷ்ணன் கருத்துத் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்