சுமத்திரா தீவில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

சுமத்திரா தீவில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

சுமத்திரா தீவில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

எழுத்தாளர் Staff Writer

13 Aug, 2017 | 3:18 pm

இந்தோனேஷியா சுமத்திரா தீவில் 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இதன் காரணமாக நாட்டை சூழவுள்ள கரையோர பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சரத் பிறேமலால் தெரிவித்துள்ளார்.

இந்த நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எந்தவித பாதிப்புக்களும் இல்லை எனவும், மக்கள் அது தொடர்பில் குழப்பமடைய தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்