உமாஓயா திட்டம் குறித்து புதிய அறிக்கைகளை பெற்றுக் கொள்வதற்கு தீர்மானம்

உமாஓயா திட்டம் குறித்து புதிய அறிக்கைகளை பெற்றுக் கொள்வதற்கு தீர்மானம்

உமாஓயா திட்டம் குறித்து புதிய அறிக்கைகளை பெற்றுக் கொள்வதற்கு தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

13 Aug, 2017 | 4:34 pm

உமாஓயா திட்டம் குறித்து புதிய அறிக்கைகளை பெற்றுக் கொள்வதற்கு, மூவர் கொண்ட அமைச்சரவை குழு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக குழு உறுப்பினரான அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜேர்மன், சுவிட்ஸர்லாந்து மற்றும் நோர்வே நாடுகளின் விசேட நிபுணர்களிடமிருந்தும் உமா ஓயா திட்டம் குறித்த அறிக்கையை பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை குழு தீர்மானித்துள்ளது.

இதேவேளை, உமா ஓயா திட்டம் காரணமாக மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் நிலவும் பகுதிகளில் இருந்து 50 இற்கும் அதிகமான குடும்பங்கள் அகற்றப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

அபாயம் நிலவும் மேலும் சில பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் நிறுவகம் குறிப்பிட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்