வட மாகாணத்தில் நிலவும் வறட்சியினால் 5 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிப்பு

வட மாகாணத்தில் நிலவும் வறட்சியினால் 5 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிப்பு

எழுத்தாளர் Staff Writer

12 Aug, 2017 | 3:32 pm

வட மாகாணத்தில் நிலவும் வறட்சியினால் 5 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வடக்கில் நிலவும் வறட்சியினால், 145,000 குடும்பங்களைச் சேர்ந்த ஐந்து இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் 10 702 குடும்பங்களைச் சேர்ந்த 34098 பேர் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு – முள்ளியவளை ஐயனார் குடியிருப்பிலுள்ள 6 பொதுக்கிணறுகளில் நான்கில் நீர் வற்றியுள்ள நிலையில் 68 குடும்பங்கள் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளன.

அத்துடன், இந்தப் பகுதியிலுள்ள இரு குழாய் கிணறுகளிலிருந்தும் சீராக நீரைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

எவ்வாறாயினும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 4071 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுவதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்