நேர்மையான அரசியல்வாதிகளை உருவாக்குவது இலகுவான காரியமல்ல – ஜனாதிபதி

நேர்மையான அரசியல்வாதிகளை உருவாக்குவது இலகுவான காரியமல்ல – ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

12 Aug, 2017 | 6:08 pm

நேர்மையான அரசியல்வாதிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்களை உருவாக்குவது இலகுவான காரியம் இல்லை என்ற போதிலும், சிறந்த அரசியல் கலாசாரமொன்றை உருவாக்குவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மகாவலி குடியிருப்பாளர்களுக்கு ஒரு இலட்சம் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

தலாவ மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மகாவலி எச் வலயத்தைச் சேர்ந்த 6,000 விவசாயிகளுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன.

இதேவேளை, 15 ஆவது சிங்க ரெஜிமன்ட்டுக்கு சொந்தமான நிலப்பரப்பிற்கான காணி உறுதிப்பத்திரம் ஜனாதிபதி தலைமையில் வழங்கப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்