குற்றவியல் நீதித்துறை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் – நீதிபதி இளஞ்செழியன்

குற்றவியல் நீதித்துறை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் – நீதிபதி இளஞ்செழியன்

குற்றவியல் நீதித்துறை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் – நீதிபதி இளஞ்செழியன்

எழுத்தாளர் Staff Writer

12 Aug, 2017 | 7:37 pm

யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்ட பீட மாணவர்களால் தொகுக்கப்பட்ட ‘நீதம்’ நூல் வெளியீட்டு விழா இன்று (12) இடம்பெற்றது.

இந்த நிகழ்வு யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் சட்டத்துறை பீடாதிபதி குருபரன் தலைமையில் இடம்பெற்றது.

பிரதம விருந்தினராக யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கலந்து சிறப்பித்தார்.

இந்த நிகழ்வில் வட மாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.விக்னேஸ்வரன் சட்டத்துறை விரிவுரையாளர்கள் , சட்டத்தரணிகள் ,சட்ட பீட மாணவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வின் போது கருத்து தெரிவித்த யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன்..

[quote]நீதித்துறையின் செயற்பாடுகள் மேலும் வினைத்திறன் பெற வேண்டும் என்பதில் எம் அனைவருக்கும் எந்தவித ஐயமுமில்லை.குற்றவியல் நீதித்துறை தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட வேண்டும்.அவதானம் செலுத்துவது என்பது வெறுமனே தண்டனை வழங்குவதாக அர்த்தப்படாது குற்றங்களைப் புரிபவர்களுக்கு அனைத்து வழிகளிலும் நீதியான செயற்பாடுகளை முன்னெடுப்பதுடன் குற்றம் புரிபவர்கள் தப்பிச் செல்வதையும் இது பொருள்படுத்தும்.குடிமக்கள் பாதுகாப்பற்ற நிலையிலும் பயத்துடனும் வாழக்கூடிய நிலை அமையக்கூடாது.[/quote]

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்