கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
எகிப்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 42 இற்கும் அதிகமானோர் உயிரிழப்பு

எகிப்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 42 இற்கும் அதிகமானோர் உயிரிழப்பு

எகிப்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 42 இற்கும் அதிகமானோர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

12 Aug, 2017 | 4:43 pm

எகிப்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 42 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 133 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

எகிப்தின் கடற்கரையோர நகரமான அலெஸ்சான்ரியாவில் இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளானதில் 42 பேர் உயிரிழந்துள்ளதுடன் 133 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ரயில் கடவையின் சமிக்ஞை விளக்குகளில் உள்ள இயந்திர கோளாறு காரணமாகவே இந்த விபத்து சம்பவித்து இருக்கக்கூடும் என அந்நாட்டின் பாதுகாப்பு அமைப்பு செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் எகிப்திய ஜனாதிபதி அப்டெல் வெட்டாக் அல் சிசி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கூறியுள்ளதுடன் தொடர்ச்சியாக மீட்பு பணிகளை முன்னெடுக்குமாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்