வவுனியாவில் சிறிய தந்தையால் துன்புறுத்தலுக்குள்ளான 4 வயது சிறுவன்

வவுனியாவில் சிறிய தந்தையால் துன்புறுத்தலுக்குள்ளான 4 வயது சிறுவன்

எழுத்தாளர் Bella Dalima

23 Aug, 2017 | 8:36 pm

வவுனியா – குருமன்காடு பகுதியில் சிறிய தந்தையால் துன்புறுத்தலுக்குள்ளான 4 வயது சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

துன்புறுத்தலுக்கு இலக்கான சிறுவன் பிரதேச மக்களால் நேற்று (22) மாலை மீட்கப்பட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சிறுவனின் தாய் மறுமணம் புரிந்த நபர் தொடர்ச்சியாக சிறுவனை துன்புறுத்தி வந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சிறுவனை அடித்து துன்புறுத்தியதாகக் கூறப்படும் நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் வவுனியா தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.