English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
10 Aug, 2017 | 8:44 pm
W.M. மென்டிஸ் நிறுவனத்தின் தகவல்களை எதிர்வரும் புதன்கிழமைக்கு முன்னர் முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வழங்க வேண்டும் என அந்நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா ரேடின் நிறுவனம் தம்வசமுள்ள தகவல்களை ஆணைக்குழுவிற்கு இன்று முற்பகல் வழங்கியது.
பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவற்று அதிகாரி கசுன் பாலிசேன இன்று மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
சர்ச்சைக்குரிய முறிகள் ஏலத்திற்கு 15 மடங்கிற்கு அதிகமான விலை மனுக்கள் முன்வைக்கப்பட்டமைக்கான காரணங்கள் தொடர்பில் இதன் போது அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து குறித்த தினம் வரை எவ்வித ஏலமும் நடதப்படவில்லை எனவும் 300 பில்லியன் கடனை அரசாங்கம் செலுத்த வேண்டி இருந்தமையினால், அந்த ஏலம் விசேடமான ஒன்றாக அமைந்ததாக இதன் போது கசுன் பாலிசேன குறிப்பிட்டிருந்தார்.
அரசாங்கத்தின் முழு கடனுடன் ஒப்பிடுகையில் 300 பில்லியன் ரூபா பாரிய நிதி ஒன்று அல்ல என நீதிபதி பிரசன்ன ஜயவர்தன சுடடிக்காட்டினார்.
15 மடங்குகளுக்கு விலை மனு கோரப்பட்டமைக்கான காரணத்தை அவர் மீண்டும் வினவினார்.
அப்போதைய சந்தை நிலவரத்திற்கு அமைய வேறு விதமாக நிதி சம்பாதிப்பதற்கு சந்தர்ப்பம் காணப்பட்டதாக ஆணைக்குழுவின் தலைவர் கே.டி.சித்ரசிறி சுட்டிக்காட்டினார்.
எனினும், அப்போதைய நிலைமைக்கு அமைய அரசாங்கத்திற்கு நிதித்தேவை காணப்பட்டதாக தாம் உணர்ந்ததாக பாலிசேன ஆணைக்குழு முன்னிலையில் கூறியிருந்தார்.
பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனம் அனைத்து விலை மனுக்களையும் ஏற்றுக்கொண்டால் அதனை எவ்வாறு செலுத்துவது என்பது தொடர்பில் இதன்போது கேள்வி எழுப்பப்பட்டது.
தம்மிடம் 500 மில்லியன் நிதி இருந்ததாகவும் பங்குகளை விற்பனை செய்வதன் ஊடாக 3.1 பில்லியனை ஈட்டியதாகவும் எஞ்சிய நிதியை வேறு கொடுக்கல் வாங்கல் ஊடாக ஈட்ட முடிந்ததாகவும் கசுன் பாலிசேன கூறினார்.
எனினும், 15 மடங்கு விலை மனு கோரப்பட்டமை தொடர்பில் இதனை விடவும் தௌிவுபடுத்த வேண்டும் என ஆணைக்குழு சுடடிக்காட்டியது.
22 Feb, 2022 | 03:12 PM
19 Jan, 2022 | 08:45 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS