ஆப்பிரிக்காவில் இருந்து ஏமன் சென்ற 49 பேரை கடலில் தள்ளிக்கொன்ற ஆட்கடத்தற்காரர்கள்

ஆப்பிரிக்காவில் இருந்து ஏமன் சென்ற 49 பேரை கடலில் தள்ளிக்கொன்ற ஆட்கடத்தற்காரர்கள்

ஆப்பிரிக்காவில் இருந்து ஏமன் சென்ற 49 பேரை கடலில் தள்ளிக்கொன்ற ஆட்கடத்தற்காரர்கள்

எழுத்தாளர் Bella Dalima

10 Aug, 2017 | 5:01 pm

ஆப்பிரிக்காவில் இருந்து ஏமன் நோக்கிப் பயணித்த அகதிகளை ஆட்கடத்தற்காரர்கள் கடலில் தள்ளிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிரிக்காவின் சோமாலியா, எத்தியோப்பியோ போன்ற நாடுகளில் உள்நாட்டு போர் காரணமாகவும் வறட்சி காரணமாகவும் ஏராளமான மக்கள் வறுமையில் வாடுகின்றனர்.

அவர்கள் அரபு நாடுகள், ஐரோப்பிய நாடுகளுக்கு தஞ்சம் தேடி அகதிகளாகச் செல்கின்றனர்.

இதற்காக சட்டவிரோத கடற்பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

அவ்வாறு எத்தியோப்பியாவில் இருந்து 120 பேரை ஏற்றிக்கொண்டு படகொன்று ஏமனுக்கு சென்றுகொண்டிருந்த போது, கடலில் பாதுகாப்புப் படையினரின் நடமாட்டத்தை ஆட்கடத்தற்காரர்கள் அவதானித்துள்ளனர்.

இதனால் தங்களைக் கைது செய்துவிடுவார்கள் என பயந்த அவர்கள், பிரச்சினையிலிருந்து தப்பிக்க படகில் இருந்தவர்களை கடலில் தள்ளிவிட்டுள்ளனர்.

தள்ளிவிடப்பட்டவர்களில் 49 பேர் உயிரிழந்துள்ளனர். ஏனைய 71 பேரை அவ்வழியாகச் சென்ற பாதுகாப்புப் படையினர் உயிருடன் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் 17 வயதிற்குட்பட்டவர்கள் எனவும் அவர்களில் கால் பங்கினர் பெண்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்