உருகாத ஐஸ்கிரீமை உருவாக்கியுள்ளனர் ஜப்பான் விஞ்ஞானிகள்

உருகாத ஐஸ்கிரீமை உருவாக்கியுள்ளனர் ஜப்பான் விஞ்ஞானிகள்

உருகாத ஐஸ்கிரீமை உருவாக்கியுள்ளனர் ஜப்பான் விஞ்ஞானிகள்

எழுத்தாளர் Bella Dalima

09 Aug, 2017 | 3:55 pm

உருகாத ஐஸ்கிரீமை ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

பொதுவாக ஐஸ்கிரீமை குளிர்பதனப் பெட்டியில் இருந்து வெளியே எடுத்து சாப்பிட ஆரம்பிக்கும்போதே உருகி வழிய ஆரம்பித்துவிடும்.

இதனால், ஐஸ்கிரீமை வேகமாக சாப்பிட்டு முடித்துவிட வேண்டும்.

இந்த சிக்கலில் இருந்து விடுபடும் விதமாக, ஜப்பானில் கனா ஜவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உருகாத ஐஸ்கிரீமைக் கண்டுபிடித்துள்ளனர்.
அறையின் வெப்பநிலைக்கு ஏற்ப 3 மணி நேரம் ஆனாலும் இந்த ஐஸ்கிரீம் உருகாது.

இந்த தகவலை ‘தி டைம்ஸ்’ பத்திரிகை வௌியிட்டுள்ளது.

ஐஸ்கிரீம் மீது முடி உலர்த்தும் கருவி மூலம் வெப்பமான காற்றை விஞ்ஞானிகள் 5 நிமிடங்கள் வீசச் செய்தும் ஐஸ்கிரீம் உருகவில்லை.

பாலிபினால் என்ற திரவத்தை விஞ்ஞானிகள் ஐஸ்கிரீமில் ஊசி மூலம் செலுத்துகின்றனர்.

அந்த திரவம்தான் ஐஸ்கிரீமை உருகாமல் தடுக்கிறது என்று கனா ஜவா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஐஸ்கிரீம் சாக்லெட், வெனிலா, ஸ்ட்ராபெர்ரி ஆகிய நறும ணங்களில் வருகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்