அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுப்பு

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுப்பு

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுப்பு

எழுத்தாளர் Bella Dalima

08 Aug, 2017 | 9:06 pm

அரசியல் கைதிகளான நிமலரூபன், டில்ருக்சன் படுகொலை செய்யப்பட்டமையை நினைவுகூரும் வகையிலும், அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் வட மாகாணத்தில் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

வவுனியா பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேவேளை, கிளிநொச்சி – கந்தசுவாமி ஆலய முன்றலிலும் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு மற்றும் கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் ஆகியன இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்