வேலைவாய்ப்புகளின்றி 42,000 பட்டதாரிகள் இருப்பதாக தெரிவிப்பு

வேலைவாய்ப்புகளின்றி 42,000 பட்டதாரிகள் இருப்பதாக தெரிவிப்பு

வேலைவாய்ப்புகளின்றி 42,000 பட்டதாரிகள் இருப்பதாக தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

08 Aug, 2017 | 10:29 am

பட்டதாரிகள் 42,000 பேர் வேலைவாய்ப்புகளின்றி இருப்பதாக ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

தொழில் வாய்ப்புகள் வழங்கப்படாத காரணத்தினால் அவர்கள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகியிருப்பதாக அந்த சங்கத்தின் ஏற்பாட்டாளர் தென்னே ஞானாநந்த தேரர் குறிப்பிட்டார்.

வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகள் குறித்து தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் செயலாளர் எம்.ஐ.எம். ரபீக்கிடம் வினவப்பட்டது.

அரச சேவையில் பட்டதாரிகளுக்கு நிலவும் பதவி வெற்றிடங்கள் தொடர்பில் அறிக்கை கோரியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அமைச்சுகளின் செயலாளர்களுக்கும், மாகாண பிரதம செயலாளர்களுக்கும் இதுதொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வெற்றிடங்கள் தொடர்பான அறிக்கை கிடைக்கப்பெற்றதும், பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் செயலாளர் மேலும் கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்