ரங்கன ஹேரத் விளையாடுவது சந்தேகம்; ருமேஷ் ரத்நாயக்க பந்துவீச்சு பயிற்றுநராக நியமனம்

ரங்கன ஹேரத் விளையாடுவது சந்தேகம்; ருமேஷ் ரத்நாயக்க பந்துவீச்சு பயிற்றுநராக நியமனம்

ரங்கன ஹேரத் விளையாடுவது சந்தேகம்; ருமேஷ் ரத்நாயக்க பந்துவீச்சு பயிற்றுநராக நியமனம்

எழுத்தாளர் Bella Dalima

08 Aug, 2017 | 7:07 pm

உபாதைக்குள்ளான ரங்கன ஹேரத் இந்தியாவுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுகின்றமை சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.

இந்தியாவிற்கு எதிராக கண்டி பல்லேகெலே மைதானத்தில் எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரங்கன ஹேரத் விளையாடும் வாய்ப்பு குறைவாகவே உள்ளதென இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

வைத்தியர்களின் ஆலோசனைக்கு அமைவாக ரங்கன ஹேரத்தை மூன்றாவது போட்டிக்கான தேர்வுக்கு பரிந்துரைக்காதிருக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான 53 வயதாகும் ருமேஷ் ரத்நாயக்க இலங்கை அணியின் தலைமை பந்துவீச்சு பயிற்றுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ருமேஷ் ரத்நாயக்க இலங்கைக்காக 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 66 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதே அவரது சிறந்த பந்துவீச்சுப் பெறுதியாகும்.

இதனிடையே, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இலங்கையின் குசல் மென்டிஸ் 19 ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்தியாவுக்க எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் சதமடித்ததும் குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்