மலேசியாவில் தீவிரவாத தடுப்பு சோதனை: சுமார் 400 பேர் கைது

மலேசியாவில் தீவிரவாத தடுப்பு சோதனை: சுமார் 400 பேர் கைது

மலேசியாவில் தீவிரவாத தடுப்பு சோதனை: சுமார் 400 பேர் கைது

எழுத்தாளர் Bella Dalima

08 Aug, 2017 | 4:57 pm

தீவிரவாத தடுப்பு சோதனையில் ஈடுபட்ட மலேசிய பொலிசார் 400-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்துள்ளனர்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று (07) தீவிரவாத தடுப்பு சோதனையில் பொலிசார் ஈடுபட்டனர்.

இதன்போது, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து போலி பாஸ்போர்ட் மற்றும் போலி குடியுரிமை ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சிரியா மற்றும் ஈராக்கைச் சேர்ந்த தீவிரவாதிகள் ஊடுருவியதாகக் கிடைத்த தகவலின் பேரில் இத்தகைய சோதனை நடத்தப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்