நீர்கொழும்பு தோப்பு பகுதியிலுள்ள சிங்கமா காளியம்மன் ஆலயத்தில் தீ

நீர்கொழும்பு தோப்பு பகுதியிலுள்ள சிங்கமா காளியம்மன் ஆலயத்தில் தீ

நீர்கொழும்பு தோப்பு பகுதியிலுள்ள சிங்கமா காளியம்மன் ஆலயத்தில் தீ

எழுத்தாளர் Staff Writer

08 Aug, 2017 | 11:58 am

நீர்கொழும்பு, தோப்பு பகுதியிலுள்ள சிங்கமா காளியம்மன் ஆலயத்தில் நேற்றிரவு தீ சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன் காரணமாக ஆலயத்தின் அறையில் வைக்கப்பட்டிருந்த அம்மனின் சாரிகள், சிலைகள், படங்கள் மற்றும் புத்தகங்கள் தீயினால் முற்றாக அழிவடைந்துள்ளன.

ஆலயத்தில் இரவு ஏழு மணியளவில் பூஜை ஒன்று நடைபெற்றதாகவும், அதன் பின்னரே தீ பரவியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தீ அனர்த்தம் சம்பந்தமாக ஆலய குருக்களின் மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், கொச்சிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்