நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் மீது துப்பாக்கிச்சூடு: சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிப்பு

நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் மீது துப்பாக்கிச்சூடு: சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிப்பு

எழுத்தாளர் Bella Dalima

08 Aug, 2017 | 6:55 pm

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான வழக்கு யாழ். நீதவான் நீதிமன்றத்தில், நீதவான் எஸ்.சதீஸ்தரன் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, மூடிய மன்றில் சந்தேகநபர் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

நீதிபதி இளஞ்செழியனின் வாகன சாரதி, துப்பாக்கிப் பிரயோகத்தின் போது காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் சந்தேகநபர் தப்பிச்சென்ற மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் ஆகியோர் இன்று மன்றில் ஆஜராகினர்.

இதனை அடுத்து, சந்தேகநபரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்