டெஸ்ட் போட்டிக்கான ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்தார் ஜடேஜா

டெஸ்ட் போட்டிக்கான ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்தார் ஜடேஜா

டெஸ்ட் போட்டிக்கான ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்தார் ஜடேஜா

எழுத்தாளர் Bella Dalima

08 Aug, 2017 | 5:27 pm

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜா, டெஸ்ட் போட்டிக்கான ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரின்போது சிறப்பாக பந்து வீசியதால் டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதல் இடம்பிடித்துள்ளார்.

மற்றொரு இந்திய வீரர் அஸ்வின் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட்டில் சிறப்பாக பந்து வீசி, இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

கொழும்பில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தியதுடன், முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 70 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.
ஆல்ரவுண்டராக சிறப்பாக செயற்பட்ட ஜடேஜா, தவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

தற்போது 438 புள்ளிகள் பெற்றுள்ள ஜடேஜா, ஏற்கனவே முதல் இடத்தில் இருந்த சகீப் அல் ஹசனை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

சகீப் அல் ஹசன் 431 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்