சாய் பல்லவியைப் பாராட்டிய சமந்தா

சாய் பல்லவியைப் பாராட்டிய சமந்தா

சாய் பல்லவியைப் பாராட்டிய சமந்தா

எழுத்தாளர் Bella Dalima

08 Aug, 2017 | 5:50 pm

பிரேமம் படத்தின் மூலமாக அறிமுகமாகி தென்னிந்திய ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ள சாய் பல்லவியின் நடிப்பைப் பார்த்து நடிகை சமந்தா பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

தற்போது தெலுங்கில் சாய் பல்லவி நடித்த ‘பிடா’ படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இதன் மூலம் தெலுங்கு பட உலகில் சாய் பல்லவிக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது.

‘பிடா’ படம் சிறிய பட்ஜெட்டில் தயாராகியிருந்தாலும் வசூலில் ஒரே வாரத்தில் 40 கோடி ரூபாவைக் கடந்து மிகப்பெரும் வெற்றி பெற்றுள்ளது.

இதனால் தயாரிப்பு தரப்பினருக்கு 25 கோடி ரூபா வரை பங்குத்தொகையாக கிடைத்திருக்கிறது.

முன்னணி நடிகை சமந்தா அண்மையில் இந்த படத்தைப் பார்த்துவிட்டு சாய் பல்லவியை மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

“ பிடா படம் மிகவும் புத்துணர்வைத் தருகிறது. படக்குழுவிற்கு எனது பாராட்டுக்கள். பிடாவில் சகலமும் சாய் பல்லவி தான். இதற்கு மேல், இனி ஒரு படத்தில் சாய் பல்லவி இருக்கிறார் என்றால் நிச்சயம் அதைப் பார்க்கலாம். அருமையான நடிப்பு வாழ்த்துக்கள்” என்று புகழ்ந்திருக்கிறார் சமந்தா.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்